» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எஸ்.ஐ.ஆர்.பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!
திங்கள் 24, நவம்பர் 2025 4:08:22 PM (IST)
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை. பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயகர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை. எஸ்.ஐ.ஆர் பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் இதுவரை கொடுக்கப்படவில்லை. படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப்படிவங்களில் 50 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன.2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப்படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் உரிய காரணம் தெரிவிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும்.
பெயர் இடம்பெறாவிட்டால் காரணம் தெரிவிக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் ஆன்லைன் சர்வர் சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவர் தவறான ஆவணத்தை கொடுக்கிறார் எனில் அதை பி.எல்.ஓக்கள்தான் கண்டுபிடிக்க முடியும். டிசம்பர் 4 வரை எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும். 33,000 தன்னார்வலர்கள், 88 ஆயிரம் பி.எல்.ஓ.க்கள் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 327 பி.எல்.ஓக்கள் தங்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது. தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ம் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:31:11 PM (IST)

சுபமுகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் நவ.27ம் தேதி கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:17:58 PM (IST)

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:13:27 PM (IST)

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:52:31 PM (IST)

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:40:12 AM (IST)

கரூர் துயர சம்பவம்: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:07:23 AM (IST)




