» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:40:48 PM (IST)
தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "இந்தியக் கடல் பகுதியில் மூன்று சுழற்சிகள் நிலவுகிறது. முன்னதாக நேற்று (23-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
நேற்று (23-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி, இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 25-ஆம் தேதி வாக்கில் (நாளை), குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவுகிறது. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எனவே, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகுதான் திசையைக் கணிக்க முடியும். அதற்கு முன்னதாக கணிக்க இயலாது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் அதிக மழை தருவதற்கான வாய்ப்பு உள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை இந்தாண்டு 5 சதவிகிதம் அதிக மழைப் பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் இயல்பை விடக் கூடுதலாக மழைப் பதிவாகியுள்ளது. ஆனால் சென்னையில் இயல்பாகப் பதிவாகும் அளவைவிடக் குறைந்த மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அடுத்த சில நாள்களில் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.கடந்த 24 நேரத்தில் ஊத்து 23 செ.மீ. மழையும், நாலுமுக்கு 22 செ.மீ., சேத்தியாத்தோப்பு 21 செ.மீ., மாஞ்சோலை 19 செ.மீட்டர் என நெல்லையில் 4 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.
நவ. 24, 25 தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ம் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:31:11 PM (IST)

சுபமுகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் நவ.27ம் தேதி கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:17:58 PM (IST)

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:13:27 PM (IST)

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:52:31 PM (IST)

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:40:12 AM (IST)

கரூர் துயர சம்பவம்: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:07:23 AM (IST)




