» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திங்கள் 24, நவம்பர் 2025 5:35:49 PM (IST)
எஸ்.ஐ.ஆரை எதிர்த்து இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி செய்கிறது. அது அவர்களுக்கு கை வைந்த கலை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் திமுக அரசின் மெத்தனத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவுதான் உண்மை நிலை. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லைமுன்கூட்டியே திட்டமிட்டு பயிர்களை அறுவடை செய்திருந்தால் மழையில் நெல் நனைத்திருக்காது. காவிரி படுகை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் 100க்கு 100 சதவீதம் வெற்றி என மார்தட்டக்கூடாது. வெற்றி பெற வைத்த மக்களுக்கு செய்ய வேண்டும். விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் திரைப்படம் பார்க்க செல்கிறார் முதல்-அமைச்சர்.
4 ஆண்டுகளில் குறுவை சாகுபடி விவசாயிகளை பயிர் காப்பிட்டு திட்டத்தில் இடம்பெற செய்யவில்லை. வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என கூறட்டும். 3 வேளாண் சட்டம் என்ன என்று முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. அவர் சொல்லட்டும் நான் பதில் கூறுகிறேன். கோரிக்கைகள் நீங்கள் கேட்டு வாங்க வேண்டும் அதனைகூட எதிர்க்கட்சிதான் செய்ய வேண்டி இருக்கிறது. காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசாங்கம். நானும் ஒரு விவசாயிதான். சட்டமன்ற உறுப்பினரானது முதல் இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன். நெல் ஈரப்பதத்தை 22 சதவீதம் ஆக உயர்த்தும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த காரணத்தை கூறவில்லை. எஸ்.ஐ.ஆரை எதிர்த்து இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி செய்கிறது. அது அவர்களுக்கு கை வைந்த கலை ஆகும். எஸ்.ஐ.ஆர். வரக்கூடாது என திமுக அரசு துடிக்கிறது. ஆளும் கட்சி அவர்கள் தான். என்ன பிரச்சினை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ம் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:31:11 PM (IST)

சுபமுகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் நவ.27ம் தேதி கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:17:58 PM (IST)

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:13:27 PM (IST)

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:52:31 PM (IST)

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:40:12 AM (IST)

கரூர் துயர சம்பவம்: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:07:23 AM (IST)




