» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!

செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)

கன்னியாகுமரியில், எஸ்ஐஆர் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் தரக்குறைவாக பேசுவதாக கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் S.I.R (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி கிராம நிர்வாக அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாகவும் மேலும் ஒரு அதிகாரியின் கைபேசியை பிடுங்கி எறிந்து அநாகரீகமாக பேசியதாகவும் கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் நாங்கள் எஸ் ஐ ஆர் (S.I.R) பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தனது பெயரை முன்னிறுத்திக்கொள்ள தங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் அதிக பணிச்சுமை தங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory