» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிட்வா புயல்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்; வெள்ள அபாய எச்சரிக்கை!
வெள்ளி 28, நவம்பர் 2025 3:48:23 PM (IST)
டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக இன்று 28.11.2025 முதல் நாளை 29.11.2025 பிற்பகல் வரை தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அனைத்து கள அலுவலர்களும் முழு அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க வேண்டாம். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர் அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக ‘டிட்வா' புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா' என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது.
டிட்வா புயல் தற்போது சென்னைக்கு தெற்கே 520 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 420 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல், தற்போது 4 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.புயல் மெதுவாக நகர்ந்து வருவதால் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ரெட் அலர்ட்
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று (28-11-2025)
இதனிடையே டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி
ராமநாதபுரம்,
புதுக்கோட்டை,
தஞ்சை,
திருவாரூர்,
நாகை,
காரைக்கால் (புதுச்சேரி)
ஆரஞ்சு அலர்ட்
சிவகங்கை
தூத்துக்குடி
அரியலூர்
மயிலாடுதுறை
மஞ்சள் அலர்ட்
கன்னியாகுமரி
நெல்லை
விருதுநகர்
மதுரை
திருச்சி
பெரம்பலூர்
கடலூர்
நாளை (29-11-2025):
நாளை 29-11-2025: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!
வெள்ளி 28, நவம்பர் 2025 8:47:18 PM (IST)

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 5:17:27 PM (IST)

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலையில் எந்த பாகுபாடும் காட்டவில்லை: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 28, நவம்பர் 2025 5:12:00 PM (IST)

செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
வெள்ளி 28, நவம்பர் 2025 4:58:28 PM (IST)

டிட்வா புயல்: அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:40:33 PM (IST)

டித்வா புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வெள்ளி 28, நவம்பர் 2025 3:13:29 PM (IST)




