» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
வெள்ளி 28, நவம்பர் 2025 4:58:28 PM (IST)
செங்கோட்டையன் சென்ற விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து நேற்று சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெகவில் இணைந்ததையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜய் படங்களுடன் அவரது கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. தனது வாகனத்தில் தவெக கட்சி கொடியையும் மாற்றியுள்ளார்.
இந்நிலையில், செங்கோட்டையன் அவரது சொந்த ஊரான ஈரோடு கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். செங்கோட்டையன் சென்ற விமானம், கோவையில் 1.40 மணிக்கு தரை இறங்க இருந்தது. இந்த நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தரை இறங்க முடியாமல் விமான நிலையத்தை விமானம் சுற்றி வந்தது.
இதனையடுத்து விமானமானது பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் விமானம் கோவை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!
வெள்ளி 28, நவம்பர் 2025 8:47:18 PM (IST)

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 5:17:27 PM (IST)

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலையில் எந்த பாகுபாடும் காட்டவில்லை: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 28, நவம்பர் 2025 5:12:00 PM (IST)

டிட்வா புயல்: அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:40:33 PM (IST)

டிட்வா புயல்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்; வெள்ள அபாய எச்சரிக்கை!
வெள்ளி 28, நவம்பர் 2025 3:48:23 PM (IST)

டித்வா புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வெள்ளி 28, நவம்பர் 2025 3:13:29 PM (IST)




