» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அருகே கார் மீது வேன் மோதல்: பெண் உயிரிழப்பு - 11 பேர் படுகாயம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 10:42:29 AM (IST)
தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். 11பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஜெயசித்ரா (42). இவர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சி கலந்து விட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். தூத்துக்குடி அருகே உள்ள குறுக்கு சாலை பெருமாள் கோவில் அருகே கார் வந்தபோது, காரை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.
இதனிடையே சின்னசேலம் அருகே உள்ள காலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி தனியார் வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை காலக்குறிச்சி கேசவன் நகரை சேர்ந்த ஆஷிப் (37) என்ற டிரைவர் ஓட்டி வந்தார். வேன் மிக வேகமாக வந்ததால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காரை கவனிக்காமல் பின்னால் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் காரின் இருந்த ஜெயசித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், வேனில் இருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
திங்கள் 1, டிசம்பர் 2025 10:30:10 AM (IST)

காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து: 11 பேர் உடல் நசுங்கி பலி
திங்கள் 1, டிசம்பர் 2025 8:34:22 AM (IST)

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:29:22 AM (IST)

பஸ் ஏற முயன்ற பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு: மாமியார், மருமகள் கைது!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:26:43 AM (IST)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 8:57:11 PM (IST)

டிட்வா புயல்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால அறை திறப்பு!
ஞாயிறு 30, நவம்பர் 2025 2:14:31 PM (IST)




