» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை மஹா தீபம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

வியாழன் 4, டிசம்பர் 2025 12:45:15 PM (IST)



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த, 24ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 3ம் தேதி, முக்கிய விழாவான பஞ்ச பூதங்கள், 'ஏகன் - அனேகன்' என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பிறகு 'அனேகன் - ஏகன்' என்பதை விளக்கும் வகையில், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கோயில் வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory