» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:48:07 PM (IST)

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை, இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்ய மறுத்து தெரிவித்ததோடு, தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மனுதாரரான ராம ரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் நேற்று இரவு திருப்பங்குன்றம் சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயற்சித்தனர. அப்போது, அவர்களை அங்கு போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து யாரையும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
சிஐஎஸ்எப் வீரர்கள் தரப்பில் நீதிமன்ற உத்தரவுடன் வந்துள்ளதாக கூறிய போதும், காவல்துறை தரப்பில் அனுமதிக்க முடியாது.. இதற்காக எந்த சிக்கல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர்.
இதனிடையே திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் மலைக்கு மேல் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுரை நீதிமன்ற நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் தமிழக அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் சென்று, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், தங்களது முறையீடு சம்பந்தமாக காலையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கமாக திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணை தொடங்கிய நிலையில், தமிழக அரசு தனது வாதத்தை முன் வைத்து வருகிறது.
அதில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது என்றும், தர்கா தரப்புக்கு மேல்முறையீடு செய்வதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை.தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பேரி கார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.. திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியது.
மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். ஆனால் மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. மனுதாரர் அதிக நபர்களோடு சென்று பிரச்சனை ஏற்படுத்தியதால், அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில், விளக்கம் அளிக்கவே வாய்ப்பு தரப்படவில்லை என்று வாதிடப்பட்டது. அதேபோல் தர்கா தரப்பும், மனுதாரர் தரப்பும் தங்களின் வாதங்களை முன் வைத்தனர்.
தொடர்ந்து நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இந்த நிலையில் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்ய இரு நீதிமதிகள் அமர்வு ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதோடு, தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறு இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: காவல்துறை அனுமதி கோரி தவெக மனு
வியாழன் 4, டிசம்பர் 2025 4:30:25 PM (IST)

கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்திற்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 4, டிசம்பர் 2025 4:10:42 PM (IST)

திருவண்ணாமலையில் கார்த்திகை மஹா தீபம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 12:45:15 PM (IST)

டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:56:27 AM (IST)

தூத்துக்குடியில் 7 புதிய மகளிர் விடியல் பயண பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:01:52 AM (IST)

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 10:43:16 AM (IST)


