» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி அனல்நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்: 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

சனி 6, டிசம்பர் 2025 8:25:15 AM (IST)



தூத்துக்குடி அனல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15-ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, முதலாவது, இரண்டாவது அலகுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. 

4, 5-ஆவது யூனிட்டுகள் பராமரிப்பு பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. 3-ஆவது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 3வது யூனிட் பழுது காரணமாக நேற்று இரவு நிறுத்தப்பட்டது.‌ இதனால் அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்களும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory