» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 750 கிலோ குட்கா பறிமுதல் : 2பேர் கைது

செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:22:21 PM (IST)



கயத்தாறு அருகே பெங்களுரில் இருந்து சரக்கு வாகனத்தில் 750 கிலோ குட்கா புகையிலையை கடத்தி வந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சுங்கச்சாவடியில் கயத்தாறு  இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பெங்களூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த டாடா இன்பிரா லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சுமார் சுமார் 750 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

இதுதொடர்பாக அந்த வாகனத்தின் ஓட்டுநரான திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் ராஜேஷ் கண்ணன் (26), மற்றும் இருசக்கர வாகனத்தில் வழிகாட்டியாக வந்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி மகன் ஜோஸ்வாராஜா (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகையிலைப் பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory