» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில் கால அட்டவணையில் கோரிக்கைகள் நிறைவேறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

புதன் 17, டிசம்பர் 2025 3:07:10 PM (IST)

திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் வழங்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால அட்டவணை வெளியிட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு ரயில் கால அட்டவணையை ரயில்வே துறை சார்பாக ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிப் பாதை முடிந்த நிலையில் இந்த கால அட்டவணையில் தற்போது இயங்கும் ரயில்கள் கால அட்டவணையில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் ரயில் கால அட்டவணையில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை ரயில்வே துறைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது 56305 / 56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயில் பெங்களூர் ரயிலின் காலி பெட்டிகளை கொண்டு இயக்கப்படுகின்றது. இதனால் திருவனந்தபுரம் செல்லும் நேரம் காலதாமதமாக இயக்கப்படுகின்றது. ஆகவே இதை தவிர்க்கும் வகையில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் வடக்கு மற்றும் திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ஆகிய இரண்டு ரயில்களையும் இணைத்து ஒரே ரயிலாக மாற்றம் செய்து திருநெல்வேலி - திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயிலாக இயக்க வேண்டுகிறோம்.

கன்னியாகுமரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்திரிகர்கள் வருகை தந்து அற்புதமான சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு காட்சிகளை கண்டு கழிக்கின்றார்கள். சூரிய மறைவை காணும் பொருட்டு கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் நேர அட்டவணை மாற்றம் செய்து கன்னியாகுமரியிலிருந்து இரவு 19:45 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு காலை 09:00 மணி சுற்றி வந்தடையும் வகையில் மாற்றம் செய்து இயக்க வேண்டுகிறோம்.

நாகர்கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேர அட்டவணை பெங்களூருக்கு 06:00-07:00 மணிக்குள் வந்தடையும் வகையிலும், பெங்களூரிலிருந்து 18:00 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றம் செய்து இயக்க வேண்டுகிறோம். பெங்களூரில் புதிய முனையத்தில் இருந்து தற்போது இயக்கப்படுவதால் முனைய நெருக்கடி பிரச்சினை தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரத்திலிருந்து 22:00 மணிக்கு புறப்படுமாறு மாற்றி, நாகர்கோவிலுக்கு 10:00 மணி சுற்றி வந்தடையும் வகையில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.

கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கோயம்புத்தூரிலிருந்து தாமதமாக புறப்படும் படியாக செய்து நாகர்கோவிலுக்கு தாமதமாக வருமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும். இதைப் போல் மறு மார்க்கமாக இந்த ரயில் நாகர்கோவிலிலிருந்து இரவு 20:30 மணிக்கு புறப்பட்டு கோயம்புத்தூருக்கு அதிகாலை போய் சேருமாறு இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.

நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸின் வேகத்தை அதிகரித்து, நாகர்கோவிலிலிருந்து காலை 09:00 மணிக்குப் புறப்படுமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும். இதைப் போல் இந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி - மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸின் வேகத்தை அதிகரித்து, கன்னியாகுமரியிலிருந்து காலை 4:00 மணிக்கு புறப்படுமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்லுமாறு இயக்க வேண்டும்.

சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் ஏற்றம் இறக்கம் உள்ளது. இரண்டு மார்க்கங்களிலும் இந்த ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் 5 நிமிட நிறுத்தமும், குழித்துறையில் ரயில் நிலையத்தில் 3 நிமிட நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லுமாறு கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் வேகத்தை அதிகரித்து, கன்னியாகுமரியிலிருந்து 19:00 மணிக்கு புறப்படும் வகையில் (சென்னை எழும்பூர் வருகை நேரத்தை மாற்றாமல்) மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்குவதன் மூலம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியின் அழகிய சூரிய மறைவை ரசிக்க வசதி செய்ய வேண்டுகிறோம்.

வழி மாற்றங்கள்

நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலின் நேர அட்டவணை நாகர்கோவிலிலிருந்து 16:00 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு 07:30 மணிக்கு வந்தடையும் வகையிலும் மாற்றம் செய்து இயக்க வேண்டுகிறோம்.

நாகர்கோவில் - கச்சிகுடா வாராந்திர ரயிலை வழித்தடத்தை திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக மாற்றம் செய்து தென் மாவட்டங்களிலிருந்து திருவண்ணாமலை புனித ஊருக்கு வாராந்திர நேரடி ரயில் இணைப்பு வழங்க வேண்டுகிறோம்.
நாகர்கோவில் - மும்பை வாரம் இரு முறை எக்ஸ்பிரஸை அரக்கோணம் பைபாஸ் வழியாக (அரக்கோணம் ஜங்ஷனில் நிற்காமல்) இயக்கி பயண நேரத்தை மிச்சப்படுத்த வேண்டுகிறோம். இந்த ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாகவும் இயக்கலாம்.

ரயில் நிறுத்த கோரிக்கைகள்

திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் வழங்க வேண்டுகிறோம். திருநெல்வேலி - ஜாம்நகர் வாரம் இரு முறை மற்றும் நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர ரயில் ஆகிய இரண்டு ரயில்களுக்கும் குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் ஸ்ரீராம் கோரிக்கை விடுத்துள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory