» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண்.

100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? முதல்வர் ஸ்டாலின். முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா?’ எனத் தெரிவித்துள்ளார்

மேலும், அவர் அந்த எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ள தனது வீடியோவில், ‘2005 ல் 100 நாள் வேலைத் திட்டத்தை ஆரம்பித்தபோது மகாத்மா காந்தியின் பெயர் இல்லை. அவரின் பெயரை 2008 -09 தேர்தலின்போதே வைத்தனர். காந்தி மீது மிகப்பெரிய மரியாதை பிரதமர் மோடிக்கு உள்ளது. பொறுப்பேற்ற உடனே ஸ்வச் பாரத் திட்டத்துக்கு காந்தியின் பெயரை பிரதமர் மோடி வைத்தார்.

இப்போது திட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. 2005-ல் இத்திட்டம் வந்தபோது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 28% ஆகும். இப்போது நாட்டின் தீவிர வறுமை ஒரு சதவீதத்துக்கும் குறைவு. எனவே திட்டத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய திட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கை 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இப்போது மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் இத்திட்டத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும். மத்திய அரசு தனக்கு வரும் வருவாயில் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு செய்கிறது. யுபிஏ அரசைவிட நான்கு மடங்கு நிதியை எங்கள் அரசு வழங்குகிறது.

100 நாள் வேலைத் திட்டத்தால் செய்யப்படும் பணிகளால் மாநிலம் வளர்ச்சி பெறுகிறது. எனவே மாநில அரசு 40 சதவீதம் வழங்குவதில் என்ன தவறு. திட்டத்தின் தன்மை மாறுவதால் இப்போது ‘விக்ஸித் பாரத்’ அதாவது வளர்ந்த பாரதம் எனப் பெயரிட்டுள்ளார்கள், இதில் என்ன தவறு. இந்த பெயரை மகாத்மா காந்தியே பாராட்டுவார்கள். நாங்கள் பல திட்டங்களுக்கு காந்தியின் பெயரை வைத்துள்ளோம்.

இந்த புதிய திட்டத்தில் பயனாளிகள் வேலை கேட்டு 15 நாட்களுக்குள் வேலை கொடுக்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு பென்சன் கொடுக்கப்படும் என்ற வழிமுறையை கொண்டுவந்துள்ளார்கள். எனவே இத்திட்டம் மக்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்” என்று கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory