» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!

சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)



சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர். இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 8 ஆயிரம் நர்சுகள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட நர்சுகளை வெளியேற்றி ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று இரவு மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நர்சுகள் நடந்தே மீண்டும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை அடைந்து அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.

அதையடுத்து கூடுவாஞ்சேரியை அடுத்த நந்தியம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலையில் நர்சுகள் தஞ்சம் அடைந்தனர். இன்று 3-வது நாளாக ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினார்கள். இது குறித்து சங்க பொதுச்செயலாளர் சுபின் கூறும்போது, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு எங்களை மிரட்டுகிறது. பணி நிரந்தரம் செய்ய பணமில்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory