» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி: அர்ச்சகர் மீது நடவடிக்கை!!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:10:44 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரூ. 100 சிறப்பு தரிசனக் கட்டணச் சீட்டு மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பக்தர்களிடம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜா அய்யர் மகன் அர்ச்சகர் பிரமோத் என்பவர் ரூ. 500, ரூ. 1,000-க்கு தரிசனம் என்று பேரம் பேசிய காணொலி டிச. 16ஆம் தேதி வெளியானது.
இதையடுத்து, கோயில் இணை ஆணையரால் பரிந்துரை செய்யப்பட்டு, தக்காரின் மறு உத்தரவு வரும் வரை, அவர் கோயிலில் பூஜை காரியங்கள், கைங்கர்யங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவோரை நம்பி பக்தர்கள் ஏமாறாமல், கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளை மட்டுமே பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரலாறு காணாத புதிய உச்சம்: மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்த தங்கத்தின் விலை..!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:15:56 AM (IST)

தூத்துக்குடியில் கடல்சார் தொல்லியல் பிரிவு : அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:31:51 AM (IST)

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் : கனிமொழி எம்.பி
திங்கள் 22, டிசம்பர் 2025 5:04:28 PM (IST)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 335 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:47:24 PM (IST)

