» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கடல்சார் தொல்லியல் பிரிவு : அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:31:51 AM (IST)

தூத்துக்குடியில் கடல்சார் தொல்லியல் பிரிவை உருவாக்கக்கோரிய வழக்கில் அரசு பரிசீலிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் உள்ள நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நினைவுச் சின்னங்களை ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் நிலையை புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கையாக வெளியிட வேண்டும்.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்காக நவீன கழிப்பறைகள், உணவகங்கள் அமைக்க வேண்டும். அனைத்துத் தொல்லியல் இடங்களையும் மாற்றுத்திறனாளிகள் சென்று பார்க்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய இந்திய தொல்லியல் ஆய்வு மையம் மற்றும் பிரத்யேக கடல்சார் தொல்லியல் பிரிவையும் உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: பழங்கால நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள், எச்சங்களைப் பாதுகாப்பதற்கு தேசிய தொல்லியல்துறை கொள்கை அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory