» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு!

வெள்ளி 26, டிசம்பர் 2025 11:19:37 AM (IST)

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ’தலைமைச் செயலாளர் அந்தஸ்தில்’ நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தந்லையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு, முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1.அர்ச்சனா பட்நாயக் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

2. சிகி தாமஸ் வைதியன் – பேரழிவு மேலாண்மை ஆணையர்

3.சமயமூர்த்தி – மனித வள மேலாண்மை துறை செயலாளர்

4.எம்.எஸ்.சண்முகம் - முதல்வரின் தனி செயலாளர்-2

5.ரீத்தா ஹரிஷ் தாக்கர் - பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர்

6.ஜெயஸ்ரீ முரளிதரன் -சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர்

ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory