» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவலர் பயிற்சி பள்ளி மாணவி கொலை : போலீசார் விசாரணை

செவ்வாய் 6, ஜனவரி 2026 8:02:46 AM (IST)

கழுகுமலை அருகே காட்டுப்பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி மாணவி கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். அங்கு திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாகுறிச்சியை சேர்ந்த மாரிச்சாமி மகன் ராஜேஷ் (25) என்பவரும் படித்து வருகிறார்.

ஒரே பயிற்சி பள்ளியில் படித்து வந்ததால் அவர்கள் நட்புடன் பழகி வந்ததாகவும், நாளடைவில் அது காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலையில் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கந்தூரிரெங்கபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு வைத்து 2 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், உமாவை பிடித்து கீழே தள்ளி கழுத்தை கையால் நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ராஜேஷ் அங்கிருந்து புறப்பட்டு நடந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் கூறி சரண் அடைந்தார். ஆனால் சம்பவம் நடந்த இடம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள் வந்ததால் வெம்பக்கோட்டை போலீசார் கழுகுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று, ராஜேஷ் பிடித்து கழுகுமலைக்கு அழைத்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளிமுத்து மற்றும் போலீசார், உமா கொைல செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். காட்டுப்பகுதியில் கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்ைல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்த கொலை குறித்து அறிந்த உமா குடும்பத்தினர், உறவினர்கள் கழுகுமலை காவல் நிலையத்தில் திரண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேசை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கழுகுமலை அருகே காவலர் பயிற்சி பள்ளி மாணவியை அவரது காதலனே கழுத்தை நெரித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory