» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்பை 3 நோயாளிக்கு பொருத்தி சாதனை

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 2:13:12 PM (IST)



செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த மூன்று நபர்களுக்கு மருத்துவமனை இயக்குனர் ரமேஷ் தலைமையிலான மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் கிட்னி செயலிழந்த மூன்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ராமநாதபுரம், கோயம்புத்தூர் பகுதியில் இருந்து மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு மூன்று சிறுநீரகம் ஆம்புலன்ஸ் மூலமாக சாலை மார்க்கமாக 24 மணி நேரத்திற்குள் கொண்டு வந்து மேல்மருவத்தூரில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறுமி மற்றும் இரண்டு பேர் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இதில் மூன்று பேருக்கும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் சிறுநீரகம் பொருத்தப்பட்ட அவர்கள் நலமுடன் உள்ளதாக மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாற்று அறுவை சிகிச்சையானது செய்யப்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை தற்போது மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர் எனவும் தெரிவித்தார். 

மேலும் இதுபோன்ற பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மருத்துவர்கள், சாதனை படைத்த மருத்துவர்கள் இதுபோல் பொது மக்களிடையே உடலுறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்வில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் கபாலி, நீலமேகம், பிரபு காஞ்சி, ரமேஷ்ராஜ், குமரேசன், வசிகரன், ராஜ்குமார், உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory