» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!

வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார்? என்று தவெக தலைவர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தான் திமுக அரசு பெண்களுக்கு முன்கூட்டியே உரிமைத் தொகையையும், கோடைக்கால சிறப்புத் தொகையையும் அறிவித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், அரசியல் ரீதியான விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறன் தவெக தலைவர் விஜய்க்கு இல்லை என்றும் அவர் சாடினார்.

தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகை நிறுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது பொய். தோல்வி பயத்தால் தற்போது ரூ.5,000 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் வராத 'கோடைக்கால அக்கறை' தேர்தல் வரும்போது மட்டும் ஸ்டாலினுக்கு ஏன் வருகிறது?" என கேள்வி எழுப்பினார்.

விஜய் குறித்த விமர்சனம்: கரூரில் ஒரு பிரச்சினை நடந்தபோது 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத விஜய், 15 நாட்கள் கட்சி அலுவலகத்தையே மூடிவிட்டார். ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார்? ஜனநாயக நாட்டில் கேள்வி கேட்பது மக்களின் உரிமை, அதற்கு பதில் சொல்ல வேண்டியது தலைவரின் கடமை என விஜய்யை விமர்சித்தார்.

ஜெயலலிதா கொண்டு வந்த மடிக்கணினி திட்டத்தை முடக்கிவிட்டு, தற்போது தேர்தலுக்காக அதனை திமுக அரசு வழங்குவது மாணவர்களை ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தார். அமித் ஷாவை சந்திப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory