» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.02.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9801 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசியர்களுக்கு பணிநியமன ஆணைகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கி பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுமக்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, அறிவிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உடனடியாக சென்றடையும் வகையில் துரிதமாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) உள்ளிட்டவைகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெறும் TRB தேர்வு கடந்த 12.10.2025 அன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியில், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல், அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த காலிப்பணியிடங்களுக்கு நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 8074 பணி நாடுநர்கள் விண்ணப்பித்தனர். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களில் 7425 நபர்கள் தேர்வு எழுதினார்கள்.
நடைபெற்ற தேர்வில் 35 பணிநாடுநர்கள் தேர்வு பெற்று அவர்களுக்கான கலந்தாய்வு 07.02.2026 மற்றும் 09.02.2026 அன்று EMIS இணையதளம் மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்கான பணியிடங்களை தெரிவு செய்தனர். இதில் 11 நபர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தையும், 24 நபர்கள் பிற மாவட்டங்களையும் தெரிவு செய்தனர்.
அதில் 2 தமிழ் முதுகலை ஆசிரியர்கள், 3 ஆங்கில முதுகலை ஆசிரியர்கள், 3 கணித முதுகலை ஆசிரியர்கள், 5 இயற்பியல் முதுகலை ஆசிரியர்கள், 4 வேதியியல் முதுகலை ஆசிரியர்கள், 7 பொருளியல் முதுகலை ஆசிரியர்கள், 2 வணிகவியல் முதுகலை ஆசிரியர்கள், 5 தாவரவியல் முதுகலை ஆசிரியர்கள், 3 விலங்கியல் முதுகலை ஆசிரியர்கள், 1 புவியியல் முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 35 முதுகலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதில் பெரும்மகிழ்ச்சியடைகிறேன். இத்தேர்வானது பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை தகுதியை மதிப்பிடும் தேர்வு ஆகும்.
பணியாணை பெற்ற உங்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். என்னுடைய குடும்பம் ஆசிரியர் குடும்பம். ஆசிரியர் பணி என்பது மிகவும் சிறப்பான பணியாகும். பணிநியமன ஆணை பெற்ற ஆசிரியர்களாகிய நீங்கள் இப்பணியினை சிறப்பாகவும், தாயுள்ளத்தோடும் மேற்கொண்டு, வருங்கால மாணவர் சமுதாயத்தினை சிறந்த முறையில் தலைசிறந்தவர்களாக உருவாக்கிட அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் (இடைநிலை-நாகர்கோவில்), .அஜிதா (தனியார்பள்ளி), சௌந்தர்ராஜன் (இடைநிலை-மார்த்தாண்டம்), தோவாளை முன்னாள் ஊராட்சிஒன்றியகுழு உறுப்பினர் பூதலிங்கம், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

தோல்வி பயத்தால் திமுக அரசு ரூ.5000 கொடுத்துள்ளது: ஜெயக்குமார் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:15:17 PM (IST)

