» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)



அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரான் நாட்டின் உயர் தலைவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பேரழிவு தரும் குண்டுகளால் குழந்தைகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது உரிய நடவடிக்கை கோரியும் தூத்துக்குடியில் பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யு.சி, எல்.பி.எஃப், எச்.எம்.எஸ், ஏ.ஐ.சி.சி.டி.யு, எம்.எல்.எஃப், எல்.எல்.எஃப், யு.டி.யு.சி உள்ளிட்ட அனைத்து முன்னணித் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory