» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)
குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகக் கடந்த 5 ஆண்டுகளில் 26 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை எடுத்து டிராவல் ஏஜென்சிகள் மற்றும் கணிணி மையங்கள் வாயிலாக முறைகேடாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. சமீபத்தில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு டிராவல் ஏஜென்சியில் சோதனை நடத்திய அதிகாரிகள், போலி கணக்குகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர் ரமேஷ் என்பவரைக் கைது செய்தனர்.
கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 26 பேர் இத்தகைய செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 லட்சத்து 12 ஆயிரத்து 217 ரூபாய் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் 22 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - பாதிரியார் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:25:03 AM (IST)

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசை விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)

