» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி மாவட்டம் தக்கலையில் போலீசாரின் வாகன சோதனையில் 20 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மதுவிலக்குத் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா மேற்பார்வையில், ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மறைத்து வைத்திருந்த 20 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், பிடிபட்ட நபர் நாகர்கோவில் காமராஜபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் ராஜ் என்பவரது மகன் ஜெரின் ஜோஸ் (37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரைக் கைது செய்து, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கக் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்: பா.ஜ.க. பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:57:20 AM (IST)

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து : 60 பயணிகள் உயிர் தப்பினர்!
ஞாயிறு 22, மார்ச் 2026 8:49:24 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சனி 21, மார்ச் 2026 5:06:31 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

