» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனைவரும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல் உறுதி!
திங்கள் 23, மார்ச் 2026 12:41:53 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடையும் வகையில் தொகுதிப் பங்கீடு சிறப்பாக அமையும்" என்று மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) நெருங்கி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காகப் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
திமுக அரசு மீது விமர்சனம்
செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது: "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தற்போதைய திமுக அரசு மீது மக்கள் மிகுந்த அதிருப்தியிலும் விரக்தியிலும் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மாநிலமாகத் தோல்வியைச் சந்தித்து வருகிறது; மக்கள் அவர்களை நிராகரித்து வருகின்றனர். தமிழக மக்கள் இப்போது ஊழலற்ற, வளர்ச்சிக்கான அரசை எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. ஊழல் கறைபடிந்த திமுகவை வீழ்த்த அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கூட்டணியில் உள்ள அனைத்துத் தலைவர்களும் அமர்ந்து பேசி, விரைவில் தொகுதிப் பங்கீட்டு விவரங்களை முறைப்படி அறிவிப்போம்," என்றார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவரான பியூஷ் கோயலின் வருகை, கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்து தேர்தலை எதிர்கொள்வதில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெற்றி பெற வேண்டி குவியும் அரசியல் பிரமுகர்கள் : களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்!
திங்கள் 23, மார்ச் 2026 3:44:24 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பாஜக தலைமை மீது சரத்குமார் அதிருப்தி: அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாக எச்சரிக்கை
திங்கள் 23, மார்ச் 2026 12:12:38 PM (IST)

ரயில் மீது கல் வீசினால் 10 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை: தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை!
திங்கள் 23, மார்ச் 2026 10:56:17 AM (IST)

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் வென்றாக வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 23, மார்ச் 2026 10:49:13 AM (IST)

ரூ.2 லட்சத்திற்கு மேல் முத்திரைத்தாள் வாங்க 'பான் கார்டு' கட்டாயம்: மோசடிகளைத் தடுக்க அதிரடி
திங்கள் 23, மார்ச் 2026 10:31:01 AM (IST)

