» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சோகம்: மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி; 2 பேர் படுகாயம்!

திங்கள் 30, மார்ச் 2026 9:31:02 AM (IST)

திருச்சி அருகே புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சன்னதி வீதியின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பக்தர்கள், நேற்று முன்தினம் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பதற்காகப் பாதயாத்திரையாக வந்தனர். இரவு நேரம் என்பதால், அவர்கள் சன்னதி வீதியில் உள்ள மேற்கூரையின் கீழ் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில், எதிர்பாராத விதமாக மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதில் அங்கே தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்தனர்: 
படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், நதியா சிகிச்சை பலனின்றி வழியிலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி ராஜ்மோகன் மற்றும் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். பாதுகாப்பு கருதி சன்னதி வீதியில் உள்ள கடைகள் அனைத்தும் தற்காலிகமாக அடைக்கப்பட்டன. பக்தர்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மாற்றுப் பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேற்கூரை இடிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்தர்கள் மத்தியில் சோகம்: நேற்று 4-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்ற நிலையில், பாதயாத்திரை வந்த பெண் பக்தர் உயிரிழந்தது சமயபுரத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மையை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory