» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்; தேர்தலுக்காக மட்டும் வருபவர்களைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான கீதா ஜீவன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 37 மற்றும் 42-வது வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பிரச்சாரத்தில் பேசிய கீதா ஜீவன், "கொரோனா காலம் மற்றும் பெருவெள்ளக் காலங்களில் அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சியினர் எங்கே இருந்தார்கள்? மக்கள் துயரத்தில் இருந்தபோது வராதவர்கள், இப்போது தேர்தல் வருவதால் மூன்று மாதங்களுக்கு முன்பே வந்து வாக்குக் கேட்கிறார்கள். ஆனால், உங்கள் இன்ப துன்பங்களிலும், கோவில் விழாக்களிலும் எப்போதும் உங்களுடன் இருப்பது திமுகவும் நானும்தான்.
எதிரணி வேட்பாளர்கள் தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், "என்னையும், எனது தந்தையையும், மேயரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை எதிரணியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தனிநபர் தாக்குதலைத் தொடங்கினால் உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும், ஜாக்கிரதையாகப் பேசுங்கள்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெறாத திட்டங்கள், இந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 52 மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் தூத்துக்குடியில் 'முதலமைச்சர் படைப்பகம்' அமைக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சண்முகம், மாவட்டத் தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர், விசிக மாவட்டச் செயலாளர் விமல், சிபிஐ மாநகரச் செயலாளர் தனலட்சுமி மற்றும் மதிமுக நிர்வாகிகள் உட்படக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்கள் தேவைகள் நிறைவேற தவெக துணை நிற்கும் : புதுவையில் விஜய் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 5:48:31 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

சாத்தூரில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:39:29 PM (IST)

குமரி - திருப்பதி இடையே ஸ்லீப்பர் பஸ் வசதி அறிமுகம்: ஆன்மீகப் பயணிகள் மகிழ்ச்சி!
சனி 4, ஏப்ரல் 2026 3:38:08 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்காது - கனிமொழி எம்.பி. பரப்புரை!
சனி 4, ஏப்ரல் 2026 11:32:52 AM (IST)

நான் ஏன் போட்டியிடவில்லை? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை!
சனி 4, ஏப்ரல் 2026 11:01:41 AM (IST)

