» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த சின்னத்திரை நடிகை திடீர் தற்கொலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:26:37 PM (IST)
பிரபல சின்னத்திரை நடிகை சுபாஷிணி, தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த நடிகை சுபாஷிணி (36), கடந்த 2024-ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பிபின் சந்திரன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதற்காக, போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர் தங்கியிருந்தார். கடந்த 3-ஆம் தேதி சென்னை வந்த அவர், தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.நேற்று இரவு சுபாஷிணி தனது கணவர் பிபின் சந்திரனுடன் வீடியோ கால் (Video Call) மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தம்பதியிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கடும் மனவேதனை அடைந்த சுபாஷிணி, பேசிக்கொண்டிருக்கும்போதே தனது படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைத் திரையில் கண்டு அதிர்ச்சியடைந்த பிபின் சந்திரன், உடனடியாகப் போரூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சுபாஷிணியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அங்கு சுபாஷிணி தூக்கில் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகப் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுபாஷிணியின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், தற்கொலைக்குக் குடும்பத் தகராறுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது கணவர் பிபின் சந்திரனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விருப்ப மனு கட்டணத்தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:35:03 AM (IST)

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு தோல்வி பயமே காரணம்: கனிமொழி கருத்து!
புதன் 8, ஏப்ரல் 2026 10:26:42 AM (IST)

தேர்தல் பொது பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா பங்கேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 10:13:57 AM (IST)

வேன் மோதி இளம்பெண் பலி: பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் படுகாயம்!
புதன் 8, ஏப்ரல் 2026 8:30:32 AM (IST)

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இருவழிப் பாதை: கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:47:33 PM (IST)

