» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எங்கள் ஓட்டு உங்களுக்கு கிடையாது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முஸ்லிம் பெண்கள் எதிர்ப்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 8:36:55 AM (IST)

திருச்செந்தூர் தொகுதியில் ஏழாவது முறையாகப் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பிரசார வாகனத்தை மறித்து, முஸ்லிம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ள மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது திமுக சார்பில் மீண்டும் களம் இறங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், அவர் செல்லும் பல்வேறு இடங்களில் உள்ளூர் மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஏற்கனவே கல்விளை, கோட்டூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரது வாகனத்தை மறித்துத் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு அவரது வாகனம் சென்றபோது, அங்கிருந்த பெண்கள் வாகனத்தை வழிமறித்து தெருவிற்குள் வர விடாமல் தடுத்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள், கடந்த காலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது, தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தரவில்லை. வரும் காலங்களில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க எவ்வித முன்னெச்சரிக்கை அல்லது முன்னேற்றப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. "எங்கள் ஓட்டு உங்களுக்கு கிடையாது; திரும்பிச் செல்லுங்கள்" எனப் பெண்கள் கோஷமிட்டனர்.
அவர்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோதும், "எங்கள் தெருவிற்குள் வராதீர்கள்" எனப் பெண்கள் பிடிவாதமாகக் கூறியதால், நீண்ட நேரம் காத்திருந்த அமைச்சர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். அமைச்சர் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தற்போது சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியிலும் இந்த எதிர்ப்பு எதிரொலித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)

தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)

அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)

