» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)

சென்னை மயிலாப்பூரில் உள்ள அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப். 13) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனம் மற்றும் வடபழனி, கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. 

அமைச்சர் சேகர் பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சோதனை நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory