» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவின் அழுத்தத்திற்கு விஜய் பணியமாட்டார் : செங்கோட்டையன் பேட்டி!

திங்கள் 13, ஏப்ரல் 2026 12:21:38 PM (IST)

ஜனநாயகன் திரைப்படம் இணையதளங்களில் வெளியானதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தான் காரணம் என்று செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக மக்கள் அனைவரும் தவெக தலைவர் விஜய் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர் பாஜகவின் அழுத்தத்திற்கு ஒருபோதும் தலைசாய்க்க மாட்டார். 'சிங்கம் தனியாகத்தான் வரும்' என்பதற்கு ஏற்ப, அவர் தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி மலரும். தமிழகம் இப்போது அவரது கையில்தான் உள்ளது.

அதிமுக குறித்துப் பேசுகையில், "அதிமுகவை அழித்தது எடப்பாடி பழனிசாமிதான். அவர் துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், தவெக-வில் பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான "ஜனநாயகன்" திரைப்படம் இணையதளங்களில் கசிந்தது  குறித்துப் பேசிய அவர், "பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தான் ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் கசியக் காரணம். இதற்கு அவரே முழுப் பொறுப்பு" என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory