» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்

வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில் மொத்தம் 8,437 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சேகரிக்கும் பணி 12.04.2026 முதல் 14.04.2026 வரை நடைபெற்றது. இதற்காக 149 மண்டல அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் நியமிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. படிவம் 12D மூலம் விருப்பம் தெரிவித்த வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, நுண்பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குகள் சேகரிக்கப்பட்டு, முத்திரையிடப்பட்ட பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தொகுதி வாரியான தபால் வாக்குகள் விவரம் (14.04.2026 அன்று மட்டும்):

கடைசி நாளான ஏப்ரல் 14-ம் தேதி அன்று மட்டும் மொத்தம் 347 வாக்குகள் பதிவாகின. அதன் விவரம்:

கன்னியாகுமரி: 103 மூத்த குடிமக்கள், 42 மாற்றுத்திறனாளிகள்.

நாகர்கோவில்: 14 மூத்த குடிமக்கள், 12 மாற்றுத்திறனாளிகள்.

குளச்சல்: 13 மூத்த குடிமக்கள், 7 மாற்றுத்திறனாளிகள்.

பத்மநாபபுரம்: 97 மூத்த குடிமக்கள், 52 மாற்றுத்திறனாளிகள்.

விளவங்கோடு: 2 மூத்த குடிமக்கள், 2 மாற்றுத்திறனாளிகள்.

கிள்ளியூர்: 1 மூத்த குடிமக்கள், 2 மாற்றுத்திறனாளிகள்.

ஒட்டுமொத்த நிலவரம்: கடந்த மூன்று நாட்களில் (ஏப். 12, 13, 14) மாவட்டம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட 5,211 மூத்த குடிமக்களும், 3,226 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 8,437 பேர் தபால் வாக்களித்துள்ளனர். ஜனநாயக் கடமையை ஆற்றிய வாக்காளர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, "தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற முழக்கத்துடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory