» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை; ஜனநாயகத்திகே! தூத்துக்குடியில் வைரலாகும் பதாகை!

வியாழன் 16, ஏப்ரல் 2026 3:10:35 PM (IST)



"வாக்கு என்பது விற்பனைக்கு அல்ல, அது ஜனநாயகத்தின் கடமை” என்பதை வலியுறுத்தி, தூத்துக்குடியில் கோவில் வரிதாரர்கள் ஒன்றிணைந்து வைத்துள்ள பதாகை பெரும் வரவேற்பை பெற்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் 1953-ம் ஆண்டு நிறுவப்பட்ட மிகப்பழமையான அருள்மிகு ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைச் சார்ந்த சுமார் 2,500 வரிதாரர்கள் ஒன்றிணைந்து, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஒருமித்த முடிவை எடுத்துள்ளனர்.

கோவில் வளாகத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள அந்தப் பதாகையில்: "ஓட்டு என்னும் மூலப்பொருளைக் கேட்டு வரும் அன்பர்களே! தொழிலதிபர்களே! எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காசி விநாயகர் - ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் வரிதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களின் ஓட்டு விற்பனைக்கு இல்லை; இது ஜனநாயகத்திற்கே!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்துக் கோவில் தர்மகர்த்தா சுப்பையா, கௌரவ தர்மகர்த்தா செம்புலிங்கம், பொருளாளர் சுடலைமணி மற்றும் கௌரவ ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது கோவிலைச் சேர்ந்த 2,500 வரிதாரர்களும் தங்களது விருப்பப்படி ஜனநாயக முறைப்படி மட்டுமே வாக்களிப்பார்கள். எக்காரணம் கொண்டும் வாக்குகளை விற்பனை செய்ய மாட்டோம்.

வாக்கு என்பது ஒரு நாட்டின் மிக முக்கிய மூலப்பொருள். இதைப் பயன்படுத்திதான் கவுன்சிலர் முதல் பிரதமர் வரை அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியலில் நேர்மையானவர்களுக்கும், ஜனநாயகத்திற்கும் வலுசேர்க்கும் வகையில் வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கோவில் முன்பு அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பதாகையை வைத்துள்ளோம்.

வாக்கிற்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக, ஒரு ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory