» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி தெரிவித்தார்.
நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர். காந்தி, தொகுதியின் முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தாமரைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய எம்.ஆர். காந்தி கூறியதாவது: "நாகர்கோவில் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே எனது முதன்மையான நோக்கம்.
இத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசின் உதவியுடன், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நாகர்கோவிலில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இத்திட்டத்தின் மூலம் தடையில்லா குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். தொகுதியின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அப்போது அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை: எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ புகார்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:52:32 PM (IST)

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:28:12 PM (IST)

வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வரிசையில் நின்ற நடிகர் அஜித்குமார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:20:49 AM (IST)

வெற்றி மீது 100% நம்பிக்கை உள்ளது: சொந்த ஊரில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி பேட்டி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 10:51:31 AM (IST)

யாருக்கு ஓட்டு என்பதை வெளிப்படுத்தினால் சிறை : தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)

தூத்துக்குடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: அமைச்சர் கீதா ஜீவன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:03:39 AM (IST)

