» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படுகிறது!

புதன் 22, ஏப்ரல் 2026 5:44:03 PM (IST)

இணைப்பு ரயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மும்பையில் இருந்து பெங்களூரு, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு ரயில் (வ.எண்.01005) மும்பையில் இருந்து வருகிற 21-ஆம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 2-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. நண்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். 

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (வ.எண்.01006) தூத்துக்குடியில் இருந்து வருகிற 22-ஆம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு புறப்படும் எனற அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory