» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாராசிட்டமால் மாத்திரை உயிருக்கே ஆபத்தாகலாம் : பொது சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!
புதன் 22, ஏப்ரல் 2026 4:07:06 PM (IST)
தமிழகத்தில் வெயில் கொடுமையால் ஏற்படும் வெப்பவாதத்திற்குச் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாகப் பாராசிட்டமால் மாத்திரை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வைரஸ் தொற்றுகள் மற்றும் கோடை கால நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, பலர் அதனைச் சாதாரணக் காய்ச்சல் என நினைத்துத் தவறாக மருந்து உட்கொள்கின்றனர். இது குறித்துச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: "வெப்பவாத பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பாராசிட்டமால் (Paracetamol) அல்லது ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரைகளைக் கொடுப்பதைத் தவிக்க வேண்டும். இந்த மருந்துகள் உடல் வெப்பத்தைக் குறைப்பதாகத் தோன்றினாலும், வெப்பவாதத்தின் போது இவை உடலில் கடுமையான எதிர்விளைவுகளை (Side Effects) உண்டாக்கி, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்."
பாதிக்கப்பட்டவருக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள்:
வெப்பம் தாளாமல் ஒருவர் மயக்கமடைந்தாலோ அல்லது சோர்வடைந்தாலோ செய்ய வேண்டியவை:
நிழலான இடம்: உடனடியாகக் காற்றோட்டமான மற்றும் நிழல் உள்ள இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
படுக்க வைக்கும் முறை: பாதிக்கப்பட்டவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைக்க வேண்டும்.
உடல் குளிர்ச்சி: நனைத்த துணியால் உடல் முழுவதையும் துடைத்து வெப்பத்தைத் தணிக்க வேண்டும்.
உணவு: இளநீர், மோர் அல்லது தண்ணீர் பருகச் செய்து நீரிழப்பைச் சரிசெய்ய வேண்டும்.
மருத்துவமனை தயார் நிலை: வெப்பவாதப் பாதிப்புகளைச் சமாளிக்கத் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேகப் படுக்கை வசதிகளைத் தயாராக வைத்திருக்கப் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சுயமாக மருந்து எடுப்பதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படுகிறது!
புதன் 22, ஏப்ரல் 2026 5:44:03 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி : கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து!
புதன் 22, ஏப்ரல் 2026 5:29:39 PM (IST)

சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.17,527 ஆக உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி!
புதன் 22, ஏப்ரல் 2026 5:13:19 PM (IST)

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கு: சி.பி.ஐ. பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:55:41 PM (IST)

காமராஜர் குறித்து அவதூறு: யூடியூபர் முத்தார் மீது நீதிமன்றத்தில் வழக்கு - விசாரணைக்கு ஏற்பு
புதன் 22, ஏப்ரல் 2026 4:27:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,868 வாக்குச்சாவடிகள் தயார் : வாக்காளர்களுக்கு ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 3:27:23 PM (IST)

