» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)
குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலுங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (24-04-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை : டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:40:55 PM (IST)

மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:19:58 PM (IST)

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு : பறக்கும் படைகள் குழு திரும்பப் பெறப்பட்டன!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:25:09 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

பஸ் டயரில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி : தந்தை கண் எதிரிலேயே சோகம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:44:42 AM (IST)

மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுப்பெண்: கோவில்பட்டியில் வைரலாகும் புகைப்படம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:58:43 PM (IST)

