» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே உக்கிரமாகும்..!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:14:35 AM (IST)
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவுவதால், இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பம் 105 டிகிரியைத் தாண்டிப் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) வரை வெப்பம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், 30-ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையுடன் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் குடை மற்றும் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோடை மழை: வரும் 28-ஆம் தேதிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கோடை மழை தொடங்க வாய்ப்புள்ளது. மே 1 முதல் 10-ஆம் தேதிக்குள் உள் மாவட்டங்களில் மழை தீவிரம் அடையக்கூடும்.
கத்திரி வெயில்: கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) மே மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
தென்மேற்கு பருவமழை: வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்னதாகவே மே 22 முதல் 24-ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் எல்-நினோ தாக்கம்: பசிபிக் பெருங்கடலில் அக்டோபர் மாதம் உருவாகவுள்ள 'சூப்பர் எல்-நினோ' காரணமாக, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் எனவும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடை காலமே நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை: வேல்முருகன் கோரிக்கை
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:20:15 AM (IST)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

மூதாட்டி மீது மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு: தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:08:16 AM (IST)

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு : கல்விச் சான்றிதழ் வாங்கச் சென்றபோது சோகம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:46:46 AM (IST)

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:20:15 PM (IST)

தூத்துக்குடியில் வாட்டும் வெயில்: பசுமைப்பந்தல் அமைக்க ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:05:06 PM (IST)


