» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் : தூத்துக்குடியில் 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:48:35 PM (IST)

பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில், தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் ஐந்து நாட்கள் நடைபெறும் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாம் தொடங்கியது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி மற்றும் காமராஜ் ஸ்டார்ட் அப் மையம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை வகித்தார். ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் கெத்சியல் ஆகஸ்டா அனைவரையும் வரவேற்றார். துணை முதல்வர் அருணாச்சல ராஜன், இ.டி.சி ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தி, கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்குத் தேவையான ஆறு முக்கியத் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன: கேக் தயாரித்தல், மீன் ஊறுகாய் தயாரித்தல், ஹெர்பல் சோப் தயாரித்தல் மற்றும் மிதியடி தயாரித்தல், மணப்பெண் அலங்காரம், அடிப்படை டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகத் தொழிலை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
நேற்று முகாம் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக கேக் தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்தப் பயிற்சி முகாம் வரும் மே 1-ஆம் தேதி வரை, தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற உள்ளது.
சுயதொழில் ஆர்வமுள்ள பெண்கள் பலரும் இந்தப் பயிற்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் செய்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவார்... 200+ தொகுதிகளில் தவெக வெல்லும் - செங்கோட்டையன் பேட்டி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:44:41 PM (IST)
_1777377317.jpg)
தேர்தல் முடிவுகளுக்குப் பின் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டுக: சீமான் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:25:41 PM (IST)

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் கோவை சூர்யா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:43:20 PM (IST)

மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:26:43 PM (IST)

தெற்காசியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர இலக்கு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:19:18 PM (IST)

வாக்கு எண்ணும் மையம் சிசிடிவி கண்காணிப்பு அறையில் ஜனநாயகன் பார்த்த ஊழியர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:35:26 PM (IST)


