» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் : கடம்பூர் செ. ராஜு நம்பிக்கை!
ஞாயிறு 3, மே 2026 9:31:37 AM (IST)
அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4, திங்கள்கிழமை) நடைபெற உள்ள நிலையில், கோவில்பட்டி தொகுதி அதிமுக வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கடம்பூர் செ. ராஜு, முகவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அதிமுக மட்டுமே தனியாக 140 முதல் 170 தொகுதிகள் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினோம். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தாமதமாகவே இணைந்ததால், அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த நடிகர்கள் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை தெரியவரும். கோவில்பட்டி தொகுதியில் நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எஸ்.ஐ.ஆர் திட்டத்தை அரசியலாக்கி எதிர்த்தவர்கள் தற்போது யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பனையூரில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்: தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு!
செவ்வாய் 5, மே 2026 3:40:03 PM (IST)

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை- நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
செவ்வாய் 5, மே 2026 12:25:58 PM (IST)

பயணத்தைத் தொடர்வோம். மீண்டும் வெல்வோம் - தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 5, மே 2026 11:56:41 AM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தனிப்பெரும் கட்சியானது தவெக: ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம்!
செவ்வாய் 5, மே 2026 10:37:05 AM (IST)

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா பெரும் சரிவு: தி.மு.க. கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றியது!
செவ்வாய் 5, மே 2026 8:56:19 AM (IST)


