» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி? – தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்!
ஞாயிறு 3, மே 2026 2:03:10 PM (IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்தவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தவும் பாஜக முயற்சிப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபி-யிடம் திமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபி-யிடம் கடிதம் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஏதேனும் செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் சந்தேகம் எழுகிறது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏதேனும் புகார்கள் வந்தால், அதன் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதாகக் கூறி நேரத்தைக் கடத்தக் கூடாது. பாஜக அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும். தேர்தல் ஆணையமும் பாஜகவின் 'பி' அணியாகச் செயல்படுவதாக நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது. எந்தவொரு சவாலையும் சந்திக்கத் திமுக தயாராக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கத் தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பனையூரில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்: தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு!
செவ்வாய் 5, மே 2026 3:40:03 PM (IST)

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை- நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
செவ்வாய் 5, மே 2026 12:25:58 PM (IST)

பயணத்தைத் தொடர்வோம். மீண்டும் வெல்வோம் - தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 5, மே 2026 11:56:41 AM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தனிப்பெரும் கட்சியானது தவெக: ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம்!
செவ்வாய் 5, மே 2026 10:37:05 AM (IST)

குமரி மாவட்டத்தில் பா.ஜனதா பெரும் சரிவு: தி.மு.க. கூட்டணி 5 தொகுதிகளை கைப்பற்றியது!
செவ்வாய் 5, மே 2026 8:56:19 AM (IST)


