» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

தூத்துக்குடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரும் சாரைப்பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்துள்ள அல்லிகுளம் கிராமத்தின் தெற்குத் தெருவில், நூலகம் அருகே பாரத்ராஜ் என்பவரது வீடு அமைந்துள்ளது. இன்று இவரது வீட்டின் முன்பகுதியில் சுமார் 5½ அடி நீளமுள்ள கரும் சாரைப்பாம்பு ஒன்று திடீரெனப் புகுந்தது. இதைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டின் முன்பகுதியில் இருந்த கற்களுக்கு அடியில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த கவனத்துடன் லாவகமாகப் பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பு சுமார் 5½ அடி நீளம் கொண்ட கரும் சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர், அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்ற வீரர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விடுவித்தனர். குடியிருப்புப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்திய பாம்பு பிடிபட்டதால், பாரத்ராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

தமிழக மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஆளுநருக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம்!
வியாழன் 7, மே 2026 5:56:39 PM (IST)

திமுகவாக இருந்தால் இந்நேரம்.. பாஜகவை எதிர்க்க விஜய்க்கு துணிவு உள்ளதா? ஷாநவாஸ் கேள்வி!
வியாழன் 7, மே 2026 5:09:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)

தமிழகத்தில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வு : ஸ்ரீதர் வேம்பு அதிரடி கருத்து!
வியாழன் 7, மே 2026 4:13:57 PM (IST)

ஸ்டாலின் - ரஜினி சந்திப்பு: அப்போ புரியல, இப்போ புரியுது - கஸ்தூரியின் பதிவு வைரல்!
வியாழன் 7, மே 2026 3:33:39 PM (IST)


