» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.60% தேர்ச்சி ‍: மாநில அளவில் தூத்துக்குடி 9வது இடம்!

புதன் 20, மே 2026 10:27:09 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தூத்துக்குடி மாவட்டம் 96.60 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 159 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 

நடைபெற்று முடிந்த மார்ச் / ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20.05.2026) வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள் என மொத்தம் 308 பள்ளிகளில், 21762 மாணாக்கர்கள் தேர்வெழுதி, 10157 மாணவர்கள், 10855 மாணவியர்கள் என மொத்தம் 21022 மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் தூத்துக்குடி மாவட்டமானது 9 வது இடம் பிடித்துள்ளது. தேர்ச்சி சதவீதம் 96.60 ஆகும். இம்மாவட்டத்தில் 159 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள 89 அரசுப் பள்ளிகளில் இருந்து 2336 மாணவர்கள் மற்றும் 3107 மாணவியர்கள் என மொத்தம் 5443 மாணாக்கர்கள் தேர்வெழுதியுள்ளனர். 

அதில் 2177 மாணவர்கள், 3036 மாணவியர்கள் என மொத்தம் 5213 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 95.77 ஆகும். 40 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவ / மாணவியர்கள் சாதனை புரிந்துள்ளனர். மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தில் தூத்துக்குடி மாவட்டமானது 6வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

159 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 308 பள்ளிகளில், 159 பள்ளிகள் தங்களது மாணவர்களை 100% முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அதேபோல், மாவட்டத்தில் உள்ள மொத்தம் 89 அரசுப் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100% நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக முத்திரை பதித்துள்ளன. 

சாதனைகளைப் புரிந்த மாணவச் செல்வங்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory