» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!

புதன் 20, மே 2026 4:31:10 PM (IST)

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூடியூபர் 'சவுக்கு' சங்கர் மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான அவதூறு வழக்குகள் மற்றும் முந்தைய வழக்குகளின் அடிப்படையில், அப்போதைய சென்னை காவல் ஆணையர் ஏ. அருண், சவுக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சவுக்கு சங்கர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வேறு வழக்குகள் ஏதுமில்லை என்றால், அவர் உடனடியாகச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் 2024-ஆம் ஆண்டு அவர் மீது பதியப்பட்ட குண்டர் சட்டங்களை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory