» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)
கொட்டாரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசந்தியா (18). இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து, அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
மாணவி சிவசந்தியா இன்று காலை பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக சிவசந்தியா மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அந்தப் பகுதிப் பொதுமக்கள், உடனடியாகப் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபரைதேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவி, சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு மட்டுமே; பிளவு இல்லை!- எஸ்பி வேலுமணி விளக்கம்!
புதன் 27, மே 2026 5:00:46 PM (IST)

அதிமுக தலைமைச் செயலகத்தில் திடீர் சமரசம்: இனி நமக்குள் பிரிவில்லை என ட்வீட்!
புதன் 27, மே 2026 12:23:54 PM (IST)

த.வெ.க. ஆட்சியில் 15 நாட்களில் சட்டம்-ஒழுங்கு காலி: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
புதன் 27, மே 2026 11:27:10 AM (IST)

பிரபல தொல்லியல் ஆய்வாளர் த.தவசிமுத்து மாறன் காலமானார்: தொல்லியல் துறையினர் இரங்கல்!
செவ்வாய் 26, மே 2026 8:14:22 PM (IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
செவ்வாய் 26, மே 2026 5:17:16 PM (IST)

மேகதாது அணை பூமி பூஜை விவகாரம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம்!
செவ்வாய் 26, மே 2026 5:12:07 PM (IST)


