» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று கன்னியாகுமரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் பிளெஸ்சிங் ஷைஜி சாதனை படைத்துள்ளார். மேலும் அவர், தனக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் பிளெஸ்சிங் ஷைஜி (வயது 25). இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர், அனைத்துக் கடினமான சூழ்நிலைகளையும் கடந்து கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் டேக்வாண்டோ தற்காப்புக் கலைப் பயிற்சியைத் தீவிரமாகப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இவர், தனது அபாரத் திறமையால் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கும், சொந்த மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
எம்.பி.க்கு நேரில் நன்றி
முன்னதாக, மங்கோலியாவில் நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்தபோது, பிளெஸ்சிங் ஷைஜியின் குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குச் செல்வதற்கான பயணச் செலவிற்குப் பணமின்றி அவர் பெரிதும் தவித்து வந்தார். இக்கட்டான இந்தச் சூழ்நிலையை அறிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 4.50 லட்சம் வழங்கி மங்கோலியா செல்ல முழுமையாக உதவினார்.
போட்டியில் தங்கம் வென்று சாதனைப் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய பிளெஸ்சிங் ஷைஜி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை நேரில் சந்தித்து, தனது விளையாட்டுப் பயணத்திற்குப் பக்கபலமாக இருந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அரசுக்குக் கோரிக்கை:
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிளெஸ்சிங் ஷைஜி, "வறுமைச் சூழலில் நான் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கத் தனது சொந்த நிதியைக் கொடுத்து உதவிய எம்பி விஜய் வசந்த் அவர்களுக்கு எனது வாழ்நாள் நன்றிகள். நான் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் படித்துப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி ஆவேன்.
எனவே, எனது எதிர்கால வாழ்வாதாரத்தையும், விளையாட்டுத் திறனையும் கருத்தில் கொண்டு, தகுதியின் அடிப்படையில் எனக்கு ஏதேனும் ஒரு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு உதவ வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். மாற்றுத்திறனாளி வீரரின் இந்த சாதனை குமரி மாவட்ட மக்களிடையே பெரும் ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.18,600 கோடியில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம்: 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு..!
வியாழன் 4, ஜூன் 2026 4:36:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சம் பெண்கள் நீக்கம்? தமிழக அரசு விளக்கம்!
வியாழன் 4, ஜூன் 2026 4:05:47 PM (IST)

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்! – அரசு விழாக்களில் பெரும் சர்ச்சை!
வியாழன் 4, ஜூன் 2026 3:53:39 PM (IST)

தமிழகத்தில் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர்! – திருச்சி சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கண்டனம்!
வியாழன் 4, ஜூன் 2026 3:40:23 PM (IST)

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 மாதாந்திர உதவித் தொகை : ஆளுநர் ஒப்புதல்
வியாழன் 4, ஜூன் 2026 3:30:55 PM (IST)

மின்துறை ஹார்டு டிஸ்குகள் திருடு போனது குறித்து விசாரணை : அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!
வியாழன் 4, ஜூன் 2026 12:51:40 PM (IST)


