» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: நண்பருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவு..!
திங்கள் 15, ஜூன் 2026 3:14:03 PM (IST)
கயத்தாறு அருகே கல்லூரி மாணவர் ஒருவர், தனது நண்பரின் மொபைல் போனுக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா, வடக்கு இலந்தகுளம் கிராமத்து வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் (21). இவர் கோவில்பட்டியில் உள்ள உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று (14.06.2026) ஞாயிற்றுக்கிழமை என்பதால், கல்லூரி விடுமுறையை முன்னிட்டு சுடலைமுத்து வீட்டில் இருந்துள்ளார். மாலை நேரத்தில், அவரோடு கல்லூரியில் பயிலும் காளிராஜ் என்ற நண்பரின் மொபைல் போனுக்கு சுடலைமுத்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், "என்னுடைய அம்மாவை நல்லா பாத்துக்கோங்க... சந்தோசமா இருங்க... எல்லாரும் ஹாப்பியா இருங்க..." என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மெசேஜை அனுப்பிவிட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய சுடலைமுத்து, மாலை 06.10 மணி அளவில் வீட்டின் சீலிங் ஃபேனில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த உறவினர்கள், அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டனர். எனினும் அவர் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு காவல் நிலைய போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஜினியரிங் மாணவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் விபூதி, குங்குமத்துடன் பள்ளிக்கு வருவது தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
திங்கள் 15, ஜூன் 2026 5:06:31 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது: அதிமுக வழக்கு!
திங்கள் 15, ஜூன் 2026 4:39:25 PM (IST)

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 3:31:21 PM (IST)

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் படுகொலை சம்பவம்: காவல்துறை விளக்கம்
திங்கள் 15, ஜூன் 2026 12:50:36 PM (IST)

கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)


