» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திங்கள் 15, ஜூன் 2026 3:31:21 PM (IST)

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை, வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகச் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் மனைவி சங்கீதா, தங்களுக்குள் விவாகரத்து கோரியும், நிரந்தர ஜீவனாம்சம் (Alimony) வழங்க உத்தரவிடக் கோரியும் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முதலாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்வாகக் காரணங்களுக்காக இந்த வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று (ஜூன் 15) செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருதரப்பு வழக்கறிஞர்களும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகக் காணொளி காட்சி மூலம் ஆன்லைனில் விசாரணையை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, தற்சமயம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்துவதற்கான சூழல் இல்லை எனக் கூறி வழக்கறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் இருதரப்பும் நீதிமன்ற நடைமுறைகளின்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory