» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் - ஆட்சியர் ஆய்வு!
சனி 20, ஜூன் 2026 12:48:36 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம், நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு நுள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திடீர் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- "கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து, அதற்கான மருந்துகளை வழங்கிட மாவட்ட சுகாதார அலுவலர், உதவி இயக்குநர் ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று மேல்நிலைத் தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள், டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகளில் உள்ளிட்டவைகளில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிப்பதோடு, வீட்டில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தண்ணீரை மூடி வைக்காமலும், கொசுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் அலட்சியமாக வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்ளாமல், உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்கள் சரிவர பணியை மேற்கொள்ளவில்லை என்றால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மு.பிரதாப், தெரிவித்தார்.
ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!: பொதுக்குழுவில் தீர்மானம்!
சனி 20, ஜூன் 2026 5:05:37 PM (IST)

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: ஒரே நாளில் சிவகங்கை டூ மதுரைக்கு மாற்றப்பட்ட ஆட்சியர்!
சனி 20, ஜூன் 2026 3:58:57 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.245.85 கோடி திட்டப்பணிகள் ரத்து : அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 20, ஜூன் 2026 3:44:34 PM (IST)

நான் முதல்வன் திட்டப் பதிவுகள் அழிப்பு: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 3:33:26 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் நிறுத்தங்கள் கிடைக்குமா? பயணிகள் கோரிக்கை!
சனி 20, ஜூன் 2026 3:17:40 PM (IST)


