» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய் பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்: நயினார் நாகேந்திரன் அறிவுரை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:26:41 PM (IST)
தமிழக முதலமைச்சர் விஜய் இனிமேலாவது அவர் தனது தகுதியை அறிந்து பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்!
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்துக்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் காட்டிய சைகை குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு பேரவையிலும் செயல்படுகிறார் என்றார். சட்டமன்ற மரபுப்படி இதுபோன்ற சைகைகளைக் காட்டக் கூடாது என்றும், முன்பு இவ்வாறு செய்தவர்களின் நிலை என்னவானது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்ட அவர், இனிமேலாவது முதலமைச்சர் பேரவை மரபைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற முடியாது எனக் கூறும் அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ நீடிக்கத் தகுதி இல்லாதவர் என்று சாடினார். அவர் சட்டம் படித்துள்ளாரா என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், நிர்மல்குமார் முன்பு பாஜகவிலும், பின்னர் அதிமுகவிலும் இருந்துவிட்டு தற்போது தவெகவில் இருக்கிறார் என்றும், அடுத்த வருடம் எந்தக் கட்சிக்குச் செல்வார் எனத் தெரியாது என்றும் விமர்சித்தார்.
முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மாளிகைக்கு எத்தனை முறை சென்றீர்கள் எனக் கேள்வி எழுப்பிய அவர், சட்டம் சரியாகப் படிக்காததாலும் எழுதத் தெரியாததாலும்தான் ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று குறிப்பிட்டார். முதலமைச்சரைப் பதவியேற்க விடுங்கள் என நிர்மல்குமார் யாருக்கெல்லாம் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார் என்பதைத் தான் சொல்லட்டுமா எனக் கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், அப்போது மட்டும் பாஜக இனிக்கிறதா என்று சாடினார்.
சட்டப்பேரவையில் தேவையான விஷயங்களை மட்டும் பேசுமாறு அறிவுறுத்திய அவர், கடந்த ஆட்சியில் மின்வெட்டுப் பிரச்சினைக்கு அணில் காரணம் என்று சொன்னார்கள், தற்போது இந்த ஆட்சியில் குரங்கு காரணம் என்று சொல்கிறார்கள் என எள்ளி நகையாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 24, ஜூன் 2026 8:39:42 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

மாமன்றத்தில் த்ரிஷா படத்தை வைக்க வேண்டும் : சுயேச்சை கவுன்சிலர் கோரிக்கையால் பரபரப்பு
புதன் 24, ஜூன் 2026 4:49:43 PM (IST)

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
புதன் 24, ஜூன் 2026 4:04:08 PM (IST)


